புதன்சந்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதன்சந்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்;
மத்திய அரசு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெள்ளம், மோர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதம் விதித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. மத்திய அரசு உணவு பொருட்கள் மீதான வரி விதிப்பை கைவிட வலியுறுத்தியும், தமிழக அரசின் உத்தேச மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதன்சந்தையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரதேச குழு உறுப்பினர் நாகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.