சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
களக்காட்டில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
களக்காடு:
நெல்லை புறநகர் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் களக்காட்டில், மது மற்றும் போதைப் பொருட்களை தடைசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வெள்ளத்துரை, இளைஞர் அணி துணை செயலாளர் சார்லஸ், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சார்லஸ் ராஜா, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் அருள்ராஜ், திருக்குறுங்குடி நகர செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் சாமுவேல், விவசாய அணி துணைச் செயலாளர் ஏசு மணி, தொண்டரணி துணை செயலாளர் சுரேஷ் ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சுடலைமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பால சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.