சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்

வால்பாறையில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

Update: 2023-10-25 19:00 GMT

வால்பாறை நகராட்சி மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணை தலைவர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கவுன்சிலர்கள் பல்ேவறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:-

வீரமணி: வால்பாறையில் உள்ள படகு இல்லம், தாவரவியல் பூங்காவை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை நிறுத்தி விட்டு நகராட்சி நிர்வாகமே நடத்த வேண்டும். நகராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.


உமாமகேஸ்வரி: வார்டு பகுதியில் உள்ள குடிதண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துமதி மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடுப்பு சுவர் கட்டித்தரவும், குடிதண்ணீர் தொட்டிகளை பராமரிப்பு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.



காமாட்சி: நகராட்சி கால்பந்தாட்ட மைதானம் பாழடைந்த நிலைக்கு மாறி வருகிறது, மைதானத்தை ஒட்டிய இடத்தில் தடுப்பு சுவர் அமைத்து குடியிருப்பு பகுதிக்குள் மழைத் தண்ணீர் செல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.


அன்பரசு:கருமலை எஸ்டேட் பயணிகள் நிழற்குடை, கழிப்பிட பணிகள் தரமான முறையில் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கருமலை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்தற்கு நன்றி.கருமலை நடுநிலை பள்ளிக்கூடத்தை சுற்றி பாதுகாப்பு கம்பி வேலி அமைத்து தர வேண்டும்.


மணிகண்டன்: நகராட்சி சார்பில் விடப்படும் ஏல நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.தங்கும் விடுதிகளுக்கு குடிதண்ணீர் கட்டணத்தை செலுத்த மானிகள் பொறுத்தும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கட்டண கழிப்பிடத்தில் தரம் பிரித்து கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும்.


வார்டு கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்ட வளர்ச்சி பணிகள் அனைத்தும் காலதாமதமின்றி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 20 இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க மன்ற கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் பேசினார்.


இதையடுத்து தார் சாலை பணிகள், வடிகால் அமைத்தல், சோலார் தெருவிளக்கு அமைத்தல், கான்கிரீட் சாலை அமைத்தல், நடைபாதை சீரமைத்தல், கழிப்பிடம் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்