மக்கள் தொடர்பு முகாம்

போடி அருகே மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

Update: 2023-01-18 19:00 GMT

போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தேனி மாவட்ட கலெக்டர் முரளி தரன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் 155 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்தும், அதனை ஏற்பாடு செய்பவர்கள் மட்டுமில்லாமல், திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கும் தண்டனை உண்டு என்று ஒருங்கிணைந்த குழந்தை நல அலுவலர் கூறினார். முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா நடேசன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்