மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள்

கடலூர் அருகே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-23 20:16 GMT

நெல்லிக்குப்பம்,

மழைநீர் சேகரிப்பு

வடகிழக்கு பருவமழையையொட்டி ஊரக வளர்ச்சி துறை சார்பில் மழைநீரை சேமிக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் தொடக்க விழா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணியை தொடங்கி வைத்தார். கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, அசோக் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி முருகன் வரவேற்றார்.

நடவடிக்கை

இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு பள்ளி வளாகங்கள் போன்றவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்