நாமக்கல்லில்தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-09-11 19:00 GMT

உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி நாமக்கல்லில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் மாவட்ட மனநல திட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முன்னதாக மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உலக தற்கொலை தடுப்பு தின உறுதிமொழி கலெக்டர் உமா தலைமையில் ஏற்கப்பட்டது.

இதனை வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்தில் கலெக்டர் உமா, இணை இயக்குனர் (மருத்துவம்) ராஜ்மோகன், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மாணவிகள் என ஏராளமானோர் கையெழுத்திட்டனர். இதையடுத்து நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் உமா கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஊர்வலம் மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை என நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் முடிவுற்றது. இதில் அரசு பள்ளி மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தோல்வியைக் கண்டு துவளாதீர், மனநலம் காப்போம், தற்கொலை தீர்வாகாது என்பது உள்பட பல்வேறு தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக நடந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்