ரியல் எஸ்டேட் மோசடி... பல கோடி ரூபாய் ஏமாற்றிய நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பிரபல நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்களுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.;

Update:2023-07-14 17:23 IST

மதுரை,

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பிரபல நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்களுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியோ மேக்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதில், நியோ மேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கமலக்கண்ணன், இயக்குனர்கள் பாலசுப்பிரமணியன், வீரசக்தி மற்றும் தியாகராஜன் ஆகியோர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், நிறுவனத்தின் கிளை இயக்குனர்கள் சைமன் ராஜா, கபில் ஆகிய இருவரை நெல்லை வைத்து போலீசார் கைது செய்தனர். இதனிடையே, தலைமறைவாக உள்ள மற்ற இயக்குனர்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.Full View

Tags:    

மேலும் செய்திகள்