7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டு அகற்றம்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டு அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2023-01-25 18:45 GMT

கோவை

பொள்ளாச்சி அருகே நெகமத்தை சேர்ந்த தம்பதிக்கு 7 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தை திடீரென்று மூச்சு திணறலால் அவதிபட்டது. இதையடுத்து அந்த குழந்தை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. உடனே அரசு டாக்டர்கள் அந்த குழந்தைக்கு நவீன கருவி மூலம் தொண்டையில் பரிசோதனை செய்தனர். இதில் குழந்தையின் மூச்சு குழாயில் ஒரு சிறிய பிளாஸ்டிக் துண்டு சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை இன்றி அந்த பிளாஸ்டிக் துண்டு நவீன முறையில் (என்டோஸ்கோப்பி) அகற்றப்பட்டது.

இந்த சிகிச்சையை ஆஸ்பத்திரியின் காது, மூக்கு தொண்டை பிரிவு பேராசிரியர் சரவணன், மயக்கவியல் டாக்டர்கள் பேராசிரியர் கல்யாண சுந்தரம் தலைமையில் மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்தனர். 7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டை அகற்றிய மருத்துவ குழுவினரை ஆஸ்பத்திரி டீன் நிர்மலா பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்