கோவை
கோவை பீளமேடு டைடல் பார்க் ரோட்டில் அனுமதியின்றி ஆவின் பாலகங்கள் மற்றும் பெட்டிக்கடைகள் செயல்படுவதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. அந்த கடைகளை அகற்றுமாறு தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி ஏ.பாபு தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு சென்று 2 ஆவின் பாலகங்கள் மற்றும் 4 பெட்டிக்கடைகளை அகற்றினார்கள். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.