கருவேல மரங்களை அகற்றும் பணி

பட்டுக்கோட்டை ரெயில் நிலையம் மற்றும் சரக்கு போக்குவரத்து முனையம் பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது.

Update: 2023-07-14 19:52 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை ரெயில் நிலையம் மற்றும் சரக்கு போக்குவரத்து முனையம் பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது.

கருவேல மரங்கள்

பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவரும், திருச்சி கோட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஜெயராமன் திருச்சியில் நடந்த திருச்சி கோட்ட ரெயில்வே உபயோகிப்போர் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பட்டுக்கோட்டை ரெயில் நிலைய வளாகத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி விட்டு அந்த பகுதியில் மரம் வளர்க்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அகற்றும் பணி

இந்த கோரிக்கையை ஏற்று பட்டுக்கோட்டை பொறியியல் பிரிவு சீனியர் செக்சன் என்ஜினீயர் பழனிவேலு முன்னிலையில் பட்டுக்கோட்டை ரெயில் நிலையம் மற்றும் போக்குவரத்து முனையம் ஆகிய பகுதிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கோரிக்கையை ஏற்று கருவேல மரங்களை அழிக்க உத்தரவிட்ட திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே பொறியாளர்கள், பட்டுக்கோட்டை பொறியியல் பிரிவு சீனியர் செக்சன் என்ஜினீயர், மற்ற களப் பணியாளர்களுக்கும் பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மரக்கன்றுகள்

கருவேல மரங்கள் அழிக்கப்பட்ட பிறகு ரெயில்வே துறையில் அனுமதி பெற்று வர்த்தக நிறுவனங்கள் உதவியுடன் பல வண்ண ஒட்டு ரக அரளி செடிகள், நிழல் தரும், பூக்கள் தரும் அழகிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பட்டுக்கோட்டை ரெயில் பயணிகள் நல சங்கம் முடிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்