கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.;

Update:2023-09-02 00:02 IST

அரக்கோணம் அருகே செல்வமந்தை கிராமத்தில் கடந்த 29-ந் தேதி மனை பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் உதவியாளர் ராஜலிங்கம் ஆகிய இருவரும் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் உதவியாளர் ராஜலிங்கத்தை அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்