ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
தாழக்குடி அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்;
ஆரல்வாய்மொழி,
தாழக்குடி அருகே உள்ள வீரநாராயணமங்கலம் பழையாறு பாலம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் 4 வீடுகள் இருந்தன. அவற்றை அகற்றுமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதில் குடியிருந்தவர்களுக்கு பொதுப்பணித்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அதில் வசித்து வந்தவர்கள் வீடுகளை விட்டு விட்டு தங்களுடைய உடமைகளை எடுத்து சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, தோவாளை தாசில்தார் தாஸ், துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் அனு தீபா, கிராம நிர்வாக அலுவலர் முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.