ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

போடி அருகே ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது

Update: 2023-06-22 19:15 GMT

போடி வடமலை நாச்சியம்மன் கோவில் பகுதியில் பாலாற்று நீரோடை அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.இந்த ஓடையை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் நீர்வரத்து இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் விளைபொருட்களை அந்த பகுதி வழியாக கொண்டு செல்வதற்கும் பாதை இல்லாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஓடையில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் போடி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், போடி துணை தாசில்தார் குமரவேல் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ராஜாமணி போடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாலாற்று நீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ேநற்று நடைபெற்றது. ஓடையில் இருந்த ஆக்கிமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்