குழிக்குள் தவறி விழுந்த 2 காட்டுப்பன்றிகள் மீட்பு
குழிக்குள் விழுந்த 2 காட்டுப் பன்றிகளையும் தீயணைப்பு நிலைய வீரர்கள் உயிருடன் மீட்டனர்.;
பேரூர்,
கோவையை அடுத்த பூலுவபட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அங்குள்ள 10 அடி ஆழ குழிக்குள் நேற்று பெரிய காட்டுப்பன்றியும், அதன் குட்டியும் தவறி விழுந்தன. அவை, வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தன.
இது குறித்த தகவலின் பேரில் தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையில் வீரர்கள்விரைந்து வந்து குழிக்குள் கயிறு கட்டி இறங்கி 2 காட்டுப் பன்றிகளையும் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.