கிணற்றில் தவறிவிழுந்த பசுமாடு மீட்பு

கிணற்றில் தவறிவிழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.;

Update:2022-07-13 23:29 IST

பெரம்பலூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் காந்தி, விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறிவிழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுமாட்டை கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். பின்னர் அதன் உரிமையாளரிடம் பசுமாடு ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்