ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகங்களில் மகளிர் திட்ட இயக்குனர் ஆய்வு

ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகங்களில் மகளிர் திட்ட இயக்குனர் ஆய்வு நடத்தினார்.;

Update:2023-04-27 00:15 IST

இளையான்குடி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இளையான்குடி ஒன்றிய கிராமங்களில் மகளிர் வாழ்வாதார இயக்கம் மற்றும் வேளாண் இடுபொருட்கள், வேளாண் உற்பத்தி பொருட்கள், வேளாண்மை கருவிகள் ஆகியவற்றை கூட்டமைப்பு மூலம் விவசாயிகளுக்கு கொடுத்து செயல்படுத்தி வருகின்றனர். இதில் தாயமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பதிவேடுகள், உற்பத்தியாளர் குழு பதிவேடுகள் மற்றும் செயல்பாடுகளை மகளிர் திட்ட இயக்குனர் வானதி ஆய்வு செய்தார். மேலும் வேளாண்மை காலங்களில் செயல்படுத்தக்கூடிய பணிகள் பற்றி விளக்கி கூறினார். திட்டப் பணிகள் ஆய்வில் உதவி திட்ட அலுவலர் அன்புராஜ், வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்