சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update:2023-10-11 22:31 IST


காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் படியூர், முதலிப்பாளையம், நல்லூர், ராக்கியாப்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் இருந்து காங்கயம் வருபவர்களும் காங்கயம் பகுதியில் இருந்து திருப்பூர் செல்பவர்களும் காங்கயம் - திருப்பூர் பிரதான சாலையை பெருமளவில் உபயோகிக்கின்றனர். தினமும் காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிகள் செல்லும் குழந்தைகள் மற்றும் மாலை நேரங்களில் வீடு திரும்பவும் இந்த சாலையை உபயோகித்து வருகின்றனர். திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்களை அழைத்து செல்லும் தனியார் நிறுவன பஸ்கள், பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்களும், 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தினமும் செல்கின்றது. போக்குவரத்து நிறைந்த சாலைகளின் நடுவே ஆடு,மாடுகள் உலா வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆடு,மாடுகளும் பஸ் மற்றும் லாரி போன்ற வாகனச் சக்கரத்தில் சிக்கி இறக்கவும் நேரிடுகிறது.

எனவே காங்கயம் நகராட்சி நிர்வாகம் கால்நடை உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் கால்நடைகள் சுற்றி திரியாதவாறு அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்