ஆப்பக்கூடலில் பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி

ஆப்பக்கூடலில் பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வக்கீல் மீது போலீசில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-22 22:05 GMT

ஈரோடு:

பவானி தாலுகா ஆப்பக்கூடல் புதுப்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்த தண்டபாணியின் மனைவி முத்துலட்சுமி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-

எனது கணவர் கடந்த 2010-ம் ஆண்டு இறந்துவிட்டார். அவருக்கு சொந்தமான பூர்வீக நிலம் சேலம் மாவட்டம் முருங்கப்பட்டியில் உள்ளது. இந்த நிலத்தை கணவரின் சகோதரர்கள் எங்களுடைய பங்கையும் சேர்த்து விற்றுவிட்டார்கள். எனவே அந்த சொத்தில் உரிமை பெறுவதற்கு வக்கீல் ஒருவர் மூலமாக சேலம் நில அபகரிப்பு பிரிவு உதவி ஆணையாளருக்கு புகார் மனு அனுப்பினோம். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி எங்களுக்கு பாத்தியப்பட்ட தொகையான ரூ.59 லட்சத்தை பெற்றுக்கொடுத்தார்கள். கணவரின் சகோதரர்கள் 3 தவணைகளாக எங்களுக்கு பணத்தை கொடுத்தனர். இதில் மீதமுள்ள தொகையான ரூ.19 லட்சத்தை வக்கீல் எடுத்து கொண்டு எங்களுக்கு கொடுக்க மறுக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு தான் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் என்று கூறி மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு தரவேண்டிய ரூ.19 லட்சத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்