தியாகதுருகத்தில் சந்தனக்கூடு நிகழ்ச்சி

தியாகதுருகத்தில் சந்தனக்கூடு நிகழ்ச்சி;

Update:2023-01-30 00:15 IST

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் சையது குளம் அருகே உள்ள தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சந்தனக்கூடு நிகழ்ச்சியையொட்டி நேற்று தர்கா வளாகத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கும் ஆபிஷா அவுலியா சந்தனக்கூடுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தர்காவில் 8-வது தலைமுறையாக சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்