தூய்மை பணி முகாம்

சங்கராபுரத்தில் தூய்மை பணி முகாம் நடந்தது.;

Update:2023-05-29 00:15 IST

சங்கராபுரம், 

சங்கராபுரம் பேரூராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணிதாகப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட ஆவின் சேர்மன் ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், தி.மு.க. நகர செயலாளர் துரைதாகப்பிள்ளை, நகர அவைத்தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் சிவக்குமார், உமாமகேஸ்வரி கோவிந்தன், கவிதாகிருபா, மாவட்ட நிர்வாகிகள் செங்குட்டுவன், முருகன், சீனு, மணி, சங்கர் வக்கீல்கள் பிரபாகர், ரமேஷ்பாபு, நகர நிர்வாகிகள் லட்சுமி, பாலமுருகன், ஏழுமலை, சதாம் உசேன், பிரகாஷ் மற்றும் பேரூராட்சி துப்புறவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்