சங்கரன்கோவில் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை

சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.;

Update:2023-06-17 00:15 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம் கூறியதாவது:-

சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க தவறிய தகுதியுள்ள மாணவர்கள் கல்லூரிக்கு நேரடியாக வந்து உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பம் பெற்று, தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இங்கு பி.ஏ. ஆங்கிலம், சமூகவியல், பி.எஸ்சி. கணினி அறிவியல், புள்ளியியல், பி.காம். வணிகவியல் ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த பாடப்பிரிவுகளில் ஒருசில இடங்கள் உள்ளதால் அரசு அளிக்கும் இந்த வாய்ப்பை சுற்றுவட்டார மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்