மரக்கன்று நடும் விழா

ஏரலில் மரக்கன்று நடும் விழா நடந்தது.;

Update:2023-08-13 00:30 IST

ஏரல்:

ஏரல் பேரூராட்சி சார்பில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நிறைவு பெறுவதை முன்னிட்டு பேரூராட்சி பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொண்டும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மரக்கன்று நடும் விழா நடந்தது.

பேரூராட்சி தலைவர் சர்மிளா தேவி மணிவண்ணன் தலைமை தாங்கி, மரக்கன்று நட்டினார். செயல் அலுவலர் தனசிங் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணிவண்ணன், சுகாதார மேற்பார்வையாளர் அடைக்கலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்