மரக்கன்று நடும் விழா

பாளையங்கோட்டையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.;

Update:2022-11-08 01:03 IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடும் விழா நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் விவசாய அணி, பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதி விதை விதைப்போம் மரம் வளர்போம் நண்பர்கள் குழு இணைந்து விதைகள் மற்றும் மரக்கன்றுகளை வி.எம்.சத்திரம் மூர்த்தி நயினார்குளத்தின் கரை ஓரத்தில் நட்டனர்.

சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தென் மண்டல செயலாளர் டாக்டர் பிரேம்நாத் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், நிர்வாகிகள் பிலிப் மாணிக்கராஜ் ஆஸ்லி, ஜெகதீஸ், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்