மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது.

Update: 2022-06-07 18:17 GMT

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை சிப்காட் மல்லாடி குழும நிறுவனங்களின் சார்பில், ராணிப்பேட்டை அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் சங்கர் தலைமை தாங்கினார். மனிதவளத்துறையின் முதுநிலை மேலாளர் நவீன்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு, மரக்கன்றுகள் நட்டு, நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். அப்போது பள்ளிகள் திறந்த பின்னர் மரக்கன்றுகள் நடுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ராணிப்பேட்டையை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம் என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, சுற்றுச்சூழல் மாவட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், தொழிற்சாலை அலுவலர்கள், ஊழியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் கணபதி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்