மரக்கன்று நடும் நிகழ்ச்சி
கோவில்பட்டியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் 11-ம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஆர். செல்வராஜ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க கிளை மேலாளர் செல்வராஜ், அலுவலர்கள் பிரபாகரன், பொன்பாண்டி மற்றும் பேராசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டினார்கள்.