சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு போலீஸ் துறை தொடக்க நாள் கொண்டாட்டம்

சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு போலீஸ் துறை தொடக்க நாள் கொண்டாட்டப்பட்டது.;

Update:2023-07-19 03:15 IST

சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு போலீஸ் துறை தொடக்க நாள் சத்தியமங்கலத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி போலீஸ் துறை தொடர்பான சேவைகள் மற்றும் சிறப்புகள் குறித்த ஊர்வலம் நடந்தது. இதில் சத்தியமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் சத்தியமங்கலத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கூடத்தை வந்தடைந்தது. அங்கு மாணவர்களுக்கு தமிழ்நாட்டின் போலீஸ் துறை குறித்த சிறப்புகள் எடுத்துக்கூறப்பட்டது. இதில் சத்தியமங்கலம் உட்கோட்ட போலீஸ் உதவி சூப்பிரண்டு ஐமன் ஜமால், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.முருகேசன், பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்