பள்ளி மாணவி தற்கொலை

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2023-05-08 00:15 IST

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே சவுமிய நாராயணபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அட்சயா (வயது 15). இவர் திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் அட்சயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோஷ்டியூர் போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்