காரைக்குடி
காரைக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் முத்து மற்றும் அதிகாரிகள் காரைக்குடி சந்தை மீன் மார்க்கெட் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். காய்கறி, மற்றும் மீன்கள் எடை குறைவாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து இந்த திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 11 மின்னணு தராசுகள், 17 இரும்பு எடை கற்கள், இரண்டு கை தராசு, மேசை தராசு, தரப்படுத்தப்படாத படிகள் 10 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் வேலாயுதம், வசந்தி, தீனதயாளன் ஆகியோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.