மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

அரக்கோணம் அருகே மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2023-06-03 23:14 IST

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த மின்னல் நரசிங்கபுரம் பகுதியில் மண் கடத்தப்படுவதாக அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவரது தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அந்த வழியாக டிராக்டரில் மண் ஏற்றி வந்தவர்கள், அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து தாசில்தார் சண்முகசுந்தரம் டிராக்டரை பறிமுதல் செய்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்