பர்கூர் அருகேமணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

பர்கூர் அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update:2023-10-18 22:53 IST

பர்கூர்

பர்கூர் போலீசார் தண்ணீர் பள்ளம் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தினர். இதனால் டிரைவர், டிராக்டரை நிறுத்தி விட்டுவிட்டு ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் டிராக்டரை சோதனை செய்த போது மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்