புரட்டாசி சனிக்கிழமையையொட்டிஉழவர்சந்தைகளில் ரூ.83 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி உழவர்சந்தைகளில் ரூ.83 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை;
சேலம்
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பொதுமக்கள் அசைவ உணவு தவிர்த்து, சைவ உணவுகளை சமைப்பார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் உழவர் சந்தைகளில் காய்கறி, பழங்கள் அதிகளவில் விற்பனை ஆகும். அதன்படி புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையான நேற்று எடப்பாடி உழவர் சந்தையில் 12 ஆயிரத்து 680 கிலோ காய்கறிகள், 2 ஆயிரத்து 760 கிலோ பழங்கள் என மொத்தம் ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 840-க்கு விற்பனை ஆகின.
அதே போன்று மேட்டூர், இளம்பிள்ளை, அஸ்தம்பட்டி, ஜலகண்டாபுரம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, ஆட்டையாம்பட்டி, சூரமங்கலம், தம்மம்பட்டி, ஆத்தூர் என மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் 217¾ டன் காய்கறிகள், 4 டன் பழங்கள் மற்றும் பூக்கள் என மொத்தம் ரூ.83 லட்சத்து 92 ஆயிரத்து 88-க்கு விற்பனை ஆகின.