செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் 30 நிமிடம் தாமதம்

நீடாமங்கலத்துக்கு வந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் 30 நிமிடம் தாமதம்

Update: 2023-03-03 18:33 GMT

நீடாமங்கலம்:

கோவையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.30 மணிக்கு நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த ரெயில் நேற்று காலை 30 நிமிடங்கள் தாமதமாக 7 மணிக்கு நீடாமங்கலத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. இதைப்போல எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.25 மணிக்கு நீடாமங்கலத்திற்கு வருவது வழக்கம். ஆனால் நேற்று 35 நிமிடம் தாமதமாக நீடாமங்கலத்துக்கு வந்தது. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்