தனித்தனி விபத்து; 2 பேர் பலி

தனித்தனி விபத்தில் 2 பேர் பலியாகினா்.;

Update:2022-07-21 21:40 IST

செஞ்சி:

செஞ்சி சக்கராபுரம் பழைய காலனியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் விஜி(வயது 26). இவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விஜி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(84). இவர் சாரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் ராமகிருஷ்ணன் பலியானார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்