நிதியமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: 6 பேருக்கு ஆகஸ்ட் 26 வரை நீதிமன்ற காவல்

தமிழக நிதியமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஆகஸ்ட் 26 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-13 18:04 GMT

மதுரை,

மதுரையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு வருகிற ஆகஸ்ட் 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வீரமரணம் அடைந்த இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 6 பேரும் தற்போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு ஆகஸ்ட் 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண் ஒருவரை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்