அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது

Update: 2023-05-15 21:07 GMT


அண்ணாமலை நகர், 

சிதம்பரம் அண்ணாமலை நகர் என்.சி.சி. 4-வது கூட்டு தொழில்நுட்ப கம்பனி சார்பில் என்.சி.சி.மாணவர்களுக்கு பயிற்சி முகாம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 9-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடலூர், விழுப்புரம், அரியலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். முகாமில் நேற்று துப்பாக்கி சுடுதல், துப்பாக்கியை கையாளுதல் குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு துப்பாக்கியால் இலக்கை நோக்கி சுட்டு பயிற்சி பெற்றனர். மேலும் துப்பாக்கியை தனித்தனியாக பிரித்து மிண்டும் சரியாக பொறுத்தினர். இந்த பயிற்சியை அண்ணாமலை நகர் என்.சி.சி. 4-வது கூட்டுத் தொழில்நுட்ப கம்பனி கமாண்டிங் ஆபிசர் கர்ணல் வாசுதேவன் நாராயணன் சேனா மெடல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுக்கான யோகா விழிப்புணர்வு பயிற்சியை அண்ணாமலை பல்கலைக்கழக யோகாத்துறை இயக்குனர் பேராசிரியர் வெங்கடாஜலபதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கேப்டன் ரவிச்சந்திரன், லெப்டினன்ட் பாலமுரளி, முதல் நிலை அலுவலர்கள் ராஜசேகர், ராஜா, அனிதா, இரண்டாம் நிலை அதிகாரிகள் ஸ்டாலின், செல்வநாதன், திருவரசமூர்த்தி ஆகியோர் செய்ததிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்