வானில் பறந்த விமானத்தில் திடீரென கிளம்பிய புகை... கோவையில் அவசரமாக தரையிறக்கம்

பெங்களூருவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென இஞ்சின் பகுதியில் கோளாறு ஏற்பட்டதற்கான அலாரம் அடித்தது.

Update: 2022-08-12 11:21 GMT

கோப்புப்படம் 

கோவை,

பெங்களூருவில் இருந்து மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டிற்கு 92 பயனிகளுடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டு இருந்தது. அப்போது திடீரென இஞ்சின் பகுதியில் கோளாறு ஏற்பட்டதற்கான அலாரம் அடித்தது.

இதையடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரட்டை இஞ்சின் கொண்ட அந்த விமானம் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அலாரம் பழுது அடைந்ததன் காரணமாக அலாரம் அடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விமானத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விமானம் மாலை 5 மணியளவில் புறப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விமானத்தில் பயனம் செய்த 92 பயனிகளுக்கு எவ்வித அசம்பாவிதமும் நேரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Tags:    

மேலும் செய்திகள்