ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-12-17 00:15 IST

சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் சிவகங்கை மேலூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 1800 கிலோ எடையுள்ள 45 மூடை ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தியதாக மதுரை வேலம்மாள் நகரை சேர்ந்த குமார் (வயது 44), உசிலம்பட்டி அருகே உள்ள கீழ பட்டியை சேர்ந்த ரமேஷ் (30), காசிமாயன் (28), பிரகாஷ் (25) ஆகியோரை கைது செய்தனர். அரிசியுடன் மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்