சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ரூ.41¾ லட்சம் தங்கம் கடத்தல்

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ரூ.41¾ லட்சம் தங்கம் கடத்தப்பட்டுள்ளது.;

Update:2023-09-24 01:30 IST

தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணி தனது பேண்டில் ரூ.20 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 349 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பது தெரியவந்தது.

பறிமுதல்

மேலும் அதே விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணி தனது பேண்டில் மறைத்து ரூ.20 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான 348 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த முத்துராசு என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து 2 பயணிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.41 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்