வெள்ளநீர் கால்வாய் பகுதியில் மண் திருட்டு

வெள்ளநீர் கால்வாய் பகுதியில் மண் திருடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update:2023-07-08 01:29 IST

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே பெரியநாடார்குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் கால்வாய் உள்ளது. இதன் கரையில் உள்ள சரள் மண்ணை பெரியநாடார் குடியிருப்பைச் சேர்ந்த ஐசக் (வயது 60) என்பவர் தனது வீட்டு தேவைக்காக அரசு அனுமதியின்றி திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வள்ளியூர் நம்பியாறு நீர்த்தேக்க திட்ட உதவி செயற்பொறியாளர் கமலகண்ணன் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஐசக்கை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்