சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு அபிஷேகம்
சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.;
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கை பட்டி சாலையில் அமைந்துள்ளது சித்தர் முத்துவடுகநாதர் சாமி கோவில். இந்த கோவிலில் உள்ள சித்தர் முத்து வடுகநாதருக்கு ஆவணி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதையொட்டி சாமிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் ெசய்யப்பட்டது.
பின்னர் மலர் மாலைகளுடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.