நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.;

Update:2022-09-08 23:43 IST

திருவரங்குளம்:

திருவரங்குளத்தில் அரங்குளநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் காளை வாகனத்தில் அரங்குளநாதர் எழுந்தருளி பிரகார வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருவுடையார்பட்டி திருமூலநாதர் கோவில், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் சமேத மங்களநாயகி அம்பாள் கோவில், பாலையூர் பழங்கரை புராதன ஈஸ்வரர் கோவில், திருமலை ராயசமுத்திரம் கதிர் காமேஸ்வரர் கோவில், விஜய ரெகுநாதபுரம் சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்