சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்;
வால்பாறை
வால்பாறையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாகம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன் மண்டபத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில் முருகப்பெருமானுக்கும், வள்ளி-தெய்வானைக்கும் சந்தனம், பன்னீர், ஜவ்வாது போன்ற 64 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.