ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம்

ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.;

Update:2023-07-23 00:38 IST

பெரம்பலூரில் உள்ள பஞ்சபாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நேற்று இரவு மூலவர் மற்றும் உற்சவ ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் தலைமையில் பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தினர். இதனைத் தொடர்ந்து உற்சவ ஆண்டாள், பெருமாள் மூலவர் சன்னதிக்கு பல்லக்கில் கொண்டு செல்லப்பட்டு பெருமாள்- ஆண்டாள் மாலை மாற்றும் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் மற்றும் பெருமாளை தரிசனம் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்