அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;
மன்னார்குடி பழைய தஞ்சை சாலை செல்வகாமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல்பெற்ற நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்றிரவு ஆடிப்பூர அம்மன் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பேரளம் அருகே ஆலத்தூரில் சவுந்தரநாயகி சமேத எரும்பீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் விழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு சவுந்தரநாயகி அம்மனுக்கு 11 ஆயிரம் வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.