சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

கொள்ளிடம் அருகே சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை;

Update:2023-09-01 00:15 IST

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாய்பாபா எழுந்தருளிய தினத்தை முன்னிட்டு சாய்பாபாவிற்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. அதில் கணபதி ஹோமம் மற்றும் பால்குடம் எடுத்தல் மற்றும் பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சாய்பாபாவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சாய்பாபா முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்