ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில்சிறப்பு பூஜை;

Update:2023-09-06 17:34 IST

தளி

உடுமலை தென்னைமரத்து வீதியில் விஸ்வகர்மா ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பாலவிநாயகர், பாலமுருகர், சொர்ண ஆகர்ஷண பைரவர், வாராகி அம்மன், நவகிரகங்கள் ஆகிய கடவுள்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலில் சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், அமாவாசை, சஷ்டி, கார்த்திகை, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதி, நவக்கிரகங்களில் சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமை பூஜை, காமாட்சியம்மனுக்கு பவுர்ணமி பூஜையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பூஜையின் போது மத நல்லிணக்கத்தோடும் ஒற்றுமையோடும் வாழ அர்ச்சனை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு கிருஷ்ணராக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை சாமி தரிசனம் செய்தனர்.

--------------

Tags:    

மேலும் செய்திகள்