கஞ்சி கலய ஊர்வலம்

கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.;

Update:2023-08-02 00:45 IST

மயிலாடுதுறை நல்லத்துக்குடி ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் நேற்று நடந்தது. மயிலாடுதுறை மாயூரநாதர் வடக்கு வீதியில் உள்ள சியாமளா தேவி கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர். வழிபாட்டு மன்ற மாவட்ட துணைத் தலைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட பொறுப்பாளர் மணக்குடி செந்தில்குமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்