கூடலூர்
தேய்பிறை அஷ்டமியையொட்டி கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகே சக்தி முனீஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள கால பைரவருக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று ஊட்டி காந்தல் சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.