நெல்லையில் கஞ்சா, பைக் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது
பாளையங்கோட்டை, சீவலப்பேரி சாலை மணிக்கூண்டு அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.;
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீவலப்பேரி சாலை மணிக்கூண்டு அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த பிரபாகரன் மகன் தர்மராஜ் (வயது 23) மற்றும் சஞ்சய்காந்தி மகன் பாலமுருகன்(21) என்பதும், அவர்களிடமிருந்து சுமார் 10 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.