சாயாவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு;

Update:2023-08-30 00:15 IST

திருவெண்காடு:

பூம்புகார் அருகே சாயாவனத்தில் சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் உள்ள நடராஜருக்கு ஆவணி மாத அபிஷேகம் நடந்தது. இதையொட்டி நடராஜருக்கு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்